மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட அன்சாரி நகரில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: October 27, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட அன்சாரி நகரில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகராட்சி 61வது வார்டு அன்சாரி நகரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தினை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு அட்டைகளையும் வழங்கினார். மேலும் மதுரை மாநகராட்சி 61வது வார்டுக்குட்பட்ட சிட்டலாட்சி நகர், அன்சாரி நகர் குறுக்குதெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து துறை அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று அமைச்சர் பொதுமக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்து உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி இதுவரை மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 50, 55, 56, 60, 76, 77,மற்றும் 59 ஆவது வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது பொதுமக்கள் விடுத்த 93 வகையான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், எல்லிஸ் நகர் பகுதி செயலாளர் பி.கே, செந்தில், வட்ட  செயலாளர்கள்  பி.கே. சுரேஷ்,            அழகு சுந்தரம், மாமன்ற உறுப்பினர் செல்வி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Media: Dinakaran